புதுடெல்லி: இந்தியர்கள் அதிக அளவில் வேலை செய்யும் வெளிநாடாகத் திகழ்கிறது ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ).
இப்போதைக்கு 3,554,000 இந்தியர்கள் ‘யுஏஇ’யில் இருக்கின்றனர்.
இந்திய வெளியுறவு இணையமைச்சர் வி முரளீதரன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் 134,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலைக்காக ‘யுஏஇ’க்குச் செல்கின்றனர்.
ஒட்டுமொத்தத்தில், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரபு நாடுகளே முன்னணியில் உள்ளன. ‘யுஏஇ’யை அடுத்து சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமான் நாடுகளுக்கு இந்தியர்கள் அதிகமாகச் செல்கின்றனர்.
இந்த ஐந்து நாடுகளிலும் சேர்த்து 7,932,000 இந்தியர்கள் இருப்பதாக அமைச்சர் முரளீதரன் குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் வேலைசெய்யும் இந்தியர்களுக்கு அனைத்து விவகாரங்களிலும் வழிகாட்டவும் ஆலோசனை வழங்கவும் ஏதுவாக துபாய், ரியாத், ஜெட்டா, கோலாலம்பூர் ஆகிய நகரங்களில் வெளிநாட்டு இந்தியர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அரபு நாடுகளிலுள்ள இந்தியத் தூதரகங்கள், தொழிலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

