தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியச் சாலைகளில் உலா வரவிருக்கும் ஊபர் நிறுவனத்தின் 25,000 மின்கார்கள்

1 mins read
de544587-27e8-49dc-ad23-cc4482cbe663
இந்தியாவில் முதன்முதலாக மின்சாரத்தில் இயங்கும் கார்களைக் கொண்டு டாக்சி சேவையை ஊபர் நிறுவனம் வழங்கவிருக்கிறது. படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: வாடகை கார் சேவை வழங்கும் ஊபர் நிறுவனம் இந்தியாவில் 25,000 மின்சார கார்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் சேவையில் ஈடுபடுத்த இருக்கிறது.

இந்தியாவில் இத்தகைய சேவையை முதன்முதலில் வழங்கவிருப்பது ஊபர் நிறுவனம்தான்.

அந்த மின்கார்கள் அனைத்தையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து அது வாங்கவிருக்கிறது.

சுற்றுச்சூழலைக் காக்கும் விதமாக இந்த முயற்சி இருக்கும் என்றும் நிறுவனங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் மின்வாகனங்கள் அதிக அளவில் சேவைகள் வழங்க வேண்டும் என்பதில் இந்திய அரசாங்கமும் அண்மைக்காலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறது.