‘உமாங்’ பாதுகாப்புக் குறைபாடு: ஆதார், ஊழியர் சேமநிதித் தரவு கசியும் அபாயம்

‘உமாங்’ பாதுகாப்புக் குறைபாடு: ஆதார், ஊழியர் சேமநிதித் தரவு கசியும் அபாயம்

1 mins read
8a6ad81b-1c14-4c3c-a7df-94f378b4b104
‘உமாங்’ (UMANG) இணையவாசலில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக ஆதார் எண்கள், ஊழியர் சேமநிதி நிறுவன விவரங்கள், சமையல் எரிவாயுப் பதிவுத் தரவுகள் ஆகியவை கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. - படம்: @UmangOfficial_/எக்ஸ் தளம்

புதுடெல்லி: இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளின் பொதுச் சேவைகளை ஒன்றிணைக்கும் ‘உமாங்’ (UMANG) இணையவாசலில் பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவுவதாக இரு இணையப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் ‘த இந்து’ நாளிதழிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால், கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதார் எண்கள், ஊழியர் சேமநிதி நிறுவன விவரங்கள், சமையல் எரிவாயுப் பதிவுத் தரவுகள் ஆகியவை கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையவாசல், 2,400க்கும் மேற்பட்ட பொதுச் சேவைகளை ஒரே செயலியில் வழங்குகிறது.

‘உமாங்’ தளத்தில் பயனர்களின் அடையாளங்கள் சேமிக்கப்படும் ஒருங்கிணைந்த சேவைகளில், ஆதார் எண்கள் குறியாக்கமின்றி அப்பட்டமாகத் தெரிந்ததாக ஆய்வாளர்கள் அக்‌ஷய், வைரல் வகேலா ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைக் கையாண்ட ஊழியர் சேமநிதி நிறுவனச் சேவைப் பிரிவு இதனால் பெரிதும் பாதிக்கப்படலாம்.

இணையக் குற்றவாளிகள் பயனர்களின் கணக்கு விவரங்களை மாற்றிப் பணத்தைத் திருட இது வழிவகுக்கும் என்றாலும், இதுவரை நிதி இழப்பு ஏற்பட்டதற்கான சான்றுகள் இல்லை.

பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்த புகாரையடுத்து, இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு சில திருத்தங்களை மேற்கொண்டு, தரவுகளைக் குறியாக்க முறைக்கு (Encryption) மாற்றியுள்ளது.

எனினும், இந்தத் தற்காப்பு நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்றும் அதனை எளிய முறைகள் மூலம் முறியடிக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்