தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்

2 mins read
419aacd9-b429-4238-82f4-8bd0afd14624
கடந்த ஏப்ரல் மாதத்தில், நாடு முழுவதும் உள்ள 15 முதல் 29 வயதுடையோர் வரை வேலையின்மை விகிதம் 13.8%ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் 15%ஆக அதிகரித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் வேலையின்மை விகிதம் 5.6%ஆக அதிகரித்துள்ளது எனப் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 5.1ஆக இருந்த வேலையின்மை விகிதமானது, கிராமப்புற வேலைவாய்ப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், விவசாய நடவடிக்கைகள் குறைவு, அதிக வெப்பத்தால் வெளிப்புற வேலைகள் தடைபட்டது ஆகிய காரணிகளால் அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் வேலையின்மை விகிதம் 5.1% ஆக இருந்தது.

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 16) வெளியிட்ட மாதாந்திர காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையில் பருவநிலை மாற்றங்களுக்கும் வேலையின்மை விகிதத்தில் பங்கிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில், நாடு முழுவதும் உள்ள 15 முதல் 29 வயதுடையோர் வரை வேலையின்மை விகிதம் 13.8%ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் 15%ஆக அதிகரித்துள்ளது.

இதே வயதுடைய பிரிவில் உள்ள இளம் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் கடந்த மாதம் 14.4%ஆக இருந்த நிலையில், தற்போது 16.3%ஆக உயர்ந்துள்ளது. இளம் ஆண்களுக்கு இந்த விகிதம் 13.6%இல் இருந்து 14.5%ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்திய அளவில், பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 5.8% ஆகவும், ஆண்களுக்கான விகிதம் 5.6% ஆகவும் உள்ளது என புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கிராமப்புறங்களில் வேலையின்மை அதிகரித்திருப்பதும் அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது.

கிராமப்புற இளையர்களிடையே வேலையின்மை கடந்த ஏப்ரல் மாதம் 10.7%ஆக இருந்தது. தற்போது அது 13%ஆக அதிகரித்துள்ளது.

இதேபோல், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 23.7%இல் இருந்து 24.7%ஆக உயர்ந்தது.

இதே வேளையில், நகர்ப்புறப் பகுதிகளில், தற்போது வேலையின்மை விகிதம் மாதத்திற்கு 17.9% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இது 17.2%ஆக இருந்தது.

இத்தகைய சூழலை நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு வேலையின்மை விகிதத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

ஊதியம் பெறாத பெண் உதவியாளர்கள், கிராமப்புறங்களில் வீட்டு வேலைக்குச் சென்றது இதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

இந்திய அளவில் வேலைவாய்ப்பு - மக்கள்தொகை விகிதமானது, கடந்த

ஏப்ரல் மாதத்தில் 52.8% ஆக இருந்த நிலையில், மே 2025இல் 51.7% ஆகக் குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்