இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள்கள் அமெரிக்கா பயணம்

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள்கள் அமெரிக்கா பயணம்

1 mins read
ee816637-ad3d-4c8d-9382-a16a9f972c8f
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர். - படம்: பிடிஐ

புதுடெல்லி: அமெரிக்காவில் நடைபெறும் முக்கியக் கனிமங்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) டெல்லியிலிருந்து புறப்பட்டார்.

அமெரிக்க அரசாங்கத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால், தற்போது இந்திய பொருள்கள் மீதான வரி 18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில், முக்கியக் கனிமங்கள் குறித்த அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

“இந்த மாநாட்டில் தூய்மையான எரிசக்தி மாற்றம் மற்றும் தாதுப் பொருள்கள் விநியோகச் சங்கிலியில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவை அமைச்சர் ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 3) நேரில் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்