புதுடெல்லி: உயர்க்கல்வி பயில அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கை 62 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
சீன மாணவர்களுக்கும் விசா வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது. எனினும், ஒப்பிட்டு அளவில் இந்திய மாணவர்களுக்கான சரிவு இரு மடங்காக உள்ளது.
இந்திய மாணவர்களுக்கு 2025ஆம் ஆண்டு மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான சேர்க்கைக் காலத்தில் 22,149 ‘எஃப்-1’ விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு அதே காலகட்டத்தில் 58,694 விசாகள் வழங்கப்பட்டிருந்தன.
‘எப்ஃ-1’ விசா மாணவர்க்கு அமெரிக்கத் தூதரகங்கள் மூலம் வழங்கப்படும் விசாவாகும். அமெரிக்காவில் உயர்க்கல்வி மேற்கொள்ளும் மாணவர்களில் இந்திய நாட்டவர்களுக்கு அடுத்தநிலையில் சீன மாணவர்கள் உள்ளனர்.
கடந்த 2025ல் 40,034 மாணவர்களுக்கு ‘எஃப்-1’ விசா வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு 58,694 மாணவர்கள் விசா பெற்றிருந்த நிலையில், மொத்த எண்ணிக்கையில் 34 விழுக்காட்டுச் சரிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, மாணவர்களுக்கான விசா அனுமதி தொடர்பாகக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.
படிப்புக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு தொடர்பான நிச்சயமற்றதன்மை, தூதரக அளவிலான தீவிரப் பரிசீலனை நடவடிக்கைகள் ஆகியவையே விசா அனுமதிச் சரிவுக்கு முக்கியக் காரணிளாக கருதப்படுகின்றன எனக் கல்விச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.


