அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியா பயணம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்தியா பயணம்

1 mins read
6e991a7f-cf3e-4a19-8476-8c80f4ad1a7f
இந்தியாவில் கோல்கத்தா, ஆக்ரா, ஜெய்ப்பூர், புதுடெல்லி ஆகிய நகரங்களுக்குத் திரு மார்க்கோ ரூபியோ பயணம் மேற்கொள்வார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. - படம்: இபிஏ

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ மே 23ஆம் தேதிமுதல் மே 26ஆம் தேதிவரை இந்தியாவிற்குச் செல்கிறார்.

இதனையடுத்து, வணிகம், தற்காப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையில் மேலும் ஒத்துழைப்பு உடன்பாடுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கோல்கத்தா, ஆக்ரா, ஜெய்ப்பூர், புதுடெல்லி ஆகிய நகரங்களுக்குத் திரு ரூபியோ பயணம் மேற்கொள்வார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமது இந்தியப் பயணத்தின்போது எரிசக்தி, பாதுகாப்பு, வணிகம், தற்காப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இந்திய உயரதிகாரிகளுடன் திரு ரூபியோ ஆலோசனை மேற்கொள்வார்.

சுவீடன் நாட்டில் மே 22ஆம் தேதி நடைபெறும் நேட்டோ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டபின், அங்கிருந்து திரு ரூபியோ இந்தியா செல்வார்.

நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்குபெறும் கூட்டத்தை இந்தியா அடுத்த வாரம் நடத்தவிருக்கிறது. அப்போது, மத்திய கிழக்குப் பதற்றம் உட்பட முக்கிய அனைத்துலகச் சவால்கள் குறித்து அவர்கள் விவாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கூட்டத்தை மே 26ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அச்சந்திப்பில் திரு ரூபியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் மொத்தேகி தோஷிமிட்சு ஆகியோர் கலந்துகொள்வர்.

குறிப்புச் சொற்கள்