இறுதிக்கட்டத்தில் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை: பியூஷ் கோயல்

இறுதிக்கட்டத்தில் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை: பியூஷ் கோயல்

1 mins read
e4a3ccbb-f4c3-4c7d-b77b-44e7b7b331f7
பியூஷ் கோயல். - படம்: கேஎன்என் இந்தியா

புதுடெல்லி: அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இருதரப்பினருக்கும் மனநிறைவு அளித்த பின்னர் ஒப்பந்தம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மிக அருமையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து அது நிறைவேறும் வரை ஐரோப்பிய ஒன்றியம் உண்மையாகவும் தீவிரமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.

இந்தியாவின் திறமையை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன என்றும் இந்தியாவுடன் வணிகம் செய்ய விரும்புகின்றன என்றும் அமைச்சர் கோயல் குறிப்பிட்டார்.

இந்தியப் பொருளியல் எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் 30 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடையும் என்றும் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தும்போது இந்தியத் தயாரிப்புகளின் தரம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்துக்கும் இன்றைய காலத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியா இப்போது மரியாதைக்குரிய நாடு என்றும் பொருளியல் நிலைத்தன்மை, நல்ல தலைமையைக் கொண்டுள்ள நாடு என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்