பிற மாநில வாகனப் பயன்பாடு: மூவாண்டுக்கு நீட்டிக்கத் திட்டம்

பிற மாநில வாகனப் பயன்பாடு: மூவாண்டுக்கு நீட்டிக்கத் திட்டம்

1 mins read
130dc8b7-9e0e-4075-9f84-2259582e082b
வேலையிட மாற்​றம், ஒப்​பந்​தப் பணி ஆகியவை காரண​மாகப் பலர் வேறு மாநிலங்​களுக்குச் செல்​கின்றனர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: பணி நிமித்​தமாகப் பிற மாநிலங்​களுக்குச் செல்வோர், தங்கள் வாகனத்தை மறு பதிவு செய்​யாமல் பயன்​படுத்​தும் காலத்தை மூவாண்டாக நீட்டிக்க இந்தியச் சாலைப் போக்​கு​வரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

வேலையிட மாற்​றம், ஒப்​பந்​தப் பணி ஆகியவை காரண​மாகப் பலர் வேறு மாநிலங்​களுக்குச் செல்​கின்றனர்.

தற்​போதுள்ள விதி​முறைப்​படி ஒரு மாநிலத்​தில் பதிவு செய்யப்பட்ட வாக​னத்​தை, வேறு மாநிலத்​தில் ஓராண்​டுக்கு மேல் பயன்​படுத்​தி​னால் அதன் உரிமை​யாளர் புதிய மாநிலத்​தில் வாகனத்தை மறு பதிவு செய்ய வேண்​டும்.

இது பணி நிமித்​தம் காரண​மாக வேறு மாநிலங்​களுக்கு அடிக்​கடி செல்​வோர்க்கும் ஒப்​பந்​தப் பணியை முடித்து விட்டு மீண்​டும் சொந்த மாநிலம் திரும்​புவோர்க்கும் சிரமத்தை ஏற்​படுத்​துகிறது.

அதை எளி​தாக்​கு​வதற்​காக, வேறு மாநிலங்​களில் மறுபதிவு செய்யாமல் வாக​னங்​களை மூவாண்டுகள் வரை பயன்​படுத்​தும் வகை​யில் மோட்​டார் வாகனச் சட்​டத்​தில் திருத்​தம் கொண்டுவர கடந்த வாரம் நடந்த இந்திய மத்திய அமைச்சர்கள் கூட்​டத்​தில் அந்நாட்டின் சாலை போக்​கு​வரத்து அமைச்​சு விருப்​பம் தெரி​வித்​தது.

வாக​னங்​களை மறு பதிவே செய்​யாமல் நாடு முழு​வதும் உள்ள அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் பயன்படுத்​தும் வகை​யில் தேசி​ய அளவி​லான பதிவு முறைக்​கும் இந்திய அரசின் தற்​போதைய நடவடிக்​கை மேலும்​ வலுசேர்க்​கும்​ எனக் கூறப்​படுகிறது.

குறிப்புச் சொற்கள்
வாகனம்திட்டம்மாநிலம்