சீரழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட உத்தராகண்ட் தாதி; ஆடவர் கைது

சீரழிக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட உத்தராகண்ட் தாதி; ஆடவர் கைது

1 mins read
3e59b1f0-53d1-4a97-b9ca-89863d16feaa
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழியுடன் காவல்துறை அதிகாரிகள். - படம்: இந்திய ஊடகம்

ருத்ரபூர்: தாதி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக நம்பப்படும் 28 வயது ஆடவர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாதி ஒருவரைக் காணவில்லை என்று கடந்த மாதம் உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபூர் நகரில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து, அந்த 33 வயது தாதியைத் தேடி கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அவரது கைப்பேசி காலவ்துறையின் கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது.

500க்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காணொளிப் பதிவுகள் ஆராயப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

இந்நிலையில், அந்தத் தாதியின் எலும்புக் கூடு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

கண்காணிப்பு மூலம் கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி அப்பெண்ணைக் கொன்றதாக நம்பப்படும் ஆடவரை உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காவல்துறையினர் வலைவீசித் தேடினர்.

இறுதியில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜூலை 31ஆம் தேதியன்று உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் வேலை முடிந்து தமது வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அப்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அவரது கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது தலையைச் செங்கல்லால் அடித்து நொறுக்கிச் சிதைத்ததாக அந்த ஆடவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

3,000 ரூபாய் பணம், அப்பெண்ணின் கைப்பேசியுடன் அவ்விடத்திலிருந்து அவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்