கேரள முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்றார்

கேரள முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்றார்

1 mins read
75f1ae1d-568f-42ba-8fe7-59494ac97622
கேரள முதல்வர் வி.டி.சதீசனுடன் அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில் 11 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். - படம்: டெக்கான் ஹெரால்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவருடன் 20 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

புதிய அரசின் பதவியேற்பு விழா திங்கட்கிழமை (மே 18) திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்கில் நடைபெற்றது.

கேரள ஆளுநர் அர்லேகர், புதிய முதல்வருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

கேரள முதல்வர் வி.டி.சதீசனுடன் அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில் 11 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும், ஆளும் கூட்டணியில் உள்ள ஐயூஎம்எல் கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள், ஆர்எஸ்பி, சிஎம்பி கட்சிகளின் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இவர்களில் 14 பேர் புதியவர்கள் ஆவர்.

பதவியேற்பு விழாவில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்