‘ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் மோடி பரிசளித்த வைரத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கும் குறைவே’

‘ஜோ பைடனின் மனைவிக்கு பிரதமர் மோடி பரிசளித்த வைரத்தின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கும் குறைவே’

1 mins read
cd10b764-bdbd-4f91-b599-8e2a3d1c0bdf
2024 நவம்பர் 18ஆம் தேதி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டில் உரையாடும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2023ல் பரிசளித்த வைரத்தின் மதிப்பு குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சு தரப்பு, ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி அளித்த 7.5 காரட் வைரம், ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் இயற்கையான வைரங்களைவிட அதன் மதிப்பு குறைவு என்றும் விளக்கமளித்தது.

ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்களின் விலை மதிப்பு, ஒரு காரட்டுக்கு ரூ.15,000க்கும் ரூ.25,000க்கும் இடைப்பட்டிருக்கும் என்று வெளியுறவு அமைச்சு தரப்பு விவரித்தது. அதன்படி, ஜில் பைடனுக்கு அளிக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு ரூ.1.1 லட்சத்துக்கும் ரூ.1.9 லட்சத்துக்கும் இடைப்பட்டிருக்கும் என்பதை அது சுட்டியது.

அந்த வைரத்தின் விலை மதிப்பு US$20,000 (அப்போதைய மதிப்பில் ரூ.16 லட்சம்) என அமெரிக்க வெளியுறவு அமைச்சு மதிப்பிட்டிருப்பது, இயற்கையான வைரங்களின் மதிப்பின் அடிப்படையிலானது எனத் தெரிவதாக அத்தரப்பு தெளிவுபடுத்தியது.

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்களின் விலைகள் அண்மைக் காலத்தில் கிட்டத்தட்ட 25% முதல் 30% வரை குறைந்திருப்பதையும் அத்தரப்பு சுட்டியது. இதனால், விழாக்காலங்களில் அத்தகைய வைரங்களுக்கான தேவை அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்