‘வந்தே மாதரம்’ பாடல்: உச்ச நீதிமன்றம் கருத்து

‘வந்தே மாதரம்’ பாடல்: உச்ச நீதிமன்றம் கருத்து

கோப்புப் படம்: தி வயர்

22 Sep 2026 - 8:04 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை மதநம்பிக்கை சார்ந்த காரணங்களால் பாட மறுப்போர் மீது எவ்விதக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயமாகப் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் சுற்றறிக்கையையும் அதைத் தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தில் வைத்துச் சட்டத் திருத்தம் மேற்கொண்டதையும் எதிர்த்து பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில் அப்பாடலின் நான்கு சரணங்கள் குறிப்பிட்ட மத வழிபாட்டு அம்சங்களைக் கொண்டுள்ளதால், அதை அனைவரும் கட்டாயமாகப் பாடச் சொல்வது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மதச்சார்பின்மைக்கு எதிரானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடல் என்பதை நீதிமன்றம் மறுக்கவில்லை என்று குறிப்பிட்டது.

எனினும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தங்களின் மத நம்பிக்கைக்கு இது முரணானது எனக் கருதுவோரைப் பாடும்படிக் கட்டாயப்படுத்தவோ அல்லது அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
தலைமை நீதிபதிஉச்ச நீதிமன்றம்பாடல்தண்டனைமனு