வாரணாசியில் 200 மோட்டார் சைக்கிள்கள் கருகின

1 mins read
5d2247e1-3955-41cc-8a68-a827201b0382
மின்சாரக் கோளாற்றால் தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. - படம்: சமூக ஊடகக் காணொளி

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாயின.

வாரணாசி கான்ட் ரயில் நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சனிக்கிழமை (நவம்பர் 30) அதிகாலையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி சேதமடைந்ததை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் காணமுடிந்தது.

திடீரென்று அந்தப் பகுதியில் தீப்பிடித்ததற்கான காரணத்தை விசாரித்து வருவதாகக் கூறிய அதிகாரிகள், அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றனர்.

12 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

மின்சாரக் கோளாற்றால் தீப்பிடித்திருக்கலாம் என அந்த வட்டார காவல்துறை அதிகாரி கன்வர் பகதூர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்