மும்பை: தமிழகத்தில் பிரபல ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், தமது வருமானத்தில் 75 விழுகாட்டுக்குமேல் சமூகத்துக்குச் செலவிடப் போவதாக அறிவித்துள்ளார்.
அவரது மூத்த மகனான 49 வயது அக்னிவேஷ் அகர்வால், அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், மாரடைப்பால் ஜனவரி 7ஆம் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அனில் அகர்வால், “இன்று எனது வாழ்க்கையின் மிக இருண்ட நாள். எனது அன்புக்குரிய மகன் அக்னிவேசை இழந்துவிட்டேன்.
“சொல்லொண்ணா துயரத்தில் நான் இருக்கிறேன். தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை,” என்றார்.
மேலும், “நாங்கள் சம்பாதிப்பதில் 75 விழுக்காட்டிற்கு மேல் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பேன் என்று நான் எனது மகனிடம் உறுதியளித்திருந்தேன்.
“இன்று, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற நான் உறுதி எடுத்துள்ளேன்,” எனத் தமது பதிவில் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அக்னிவேஷ் அகர்வாலின் அகால மரணத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சமூகப் பணிக்காக, தனது சொத்தில் 75 விழுக்காட்டுக்குமேல் செலவிடப்போவதாக அறிவித்துள்ள அனில் அகர்வாலின் ‘வேதாந்தா’ குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 2.43 லட்சம் கோடி.

