திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதுமையான தானியக்க விநியோக இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெங்கடேஸ்வரர், லட்சுமி தேவிஎனக் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்ட வெள்ளி, தங்கப் பதக்கங்களை இந்த இயந்திரம் விநியோகிக்கிறது.
பக்தியையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் நடைமுறையாக இது கருதப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த பெருஞ்செல்வந்தர் ஹர்ஷ் கோயெங்கா தமது எக்ஸ் பதிவில் இது தொடர்பான காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் சேவை வழங்கும் வர்த்தக ரீதியிலான தங்க விநியோக இயந்திரங்களிலிருந்து இது மாறுபட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மின்னிலக்க உருமாற்றத்தின்கீழ் இந்தத் தானியக்க இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
2 கிராம், 5 கிராம், 10 கிராம் எடையுள்ள பதக்கங்களை இந்த இயந்திரம் விநியோகிக்கிறது.
இவற்றை வாங்குமுன் வெள்ளி, தங்கத்தின் விலையை நிகழ்நேரத் தகவலாக இயந்திரத்தின் திரையில் காணமுடியும்.
அட்ஃப்