குவாஹட்டி: அசாம் மாநிலத்தில் 3,030 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘குமார் பாஸ்கர் வர்மா சேது’ பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (பிப்ரவரி 14) திறந்து வைத்தார்.
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இப்பாலம், ஒரே நேரத்தில் ஆறு வழித்தடங்களில் வாகனங்கள் செல்லும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் குவஹாத்திக்கும் வடக்கு குவஹாத்திக்கும் இடையிலான பயண நேரத்தை 45-60 நிமிடங்களிலிருந்து 7 முதல் 10 நிமிடங்களாகக் குறைக்கும். அசாமின் தலைநகர் பகுதியின் மேம்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்.
போக்குவரத்து அமைப்புகள் நடைமுறைக்கு வந்தவுடன் மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து வாகன இயக்கம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. This 1.24-km extradosed bridge is a part of a wider 8.4-km connectivity corridor. It is built at an estimated cost of Rs 3,300 crore. Built at an estimated cost of ₹3,300 crore, the structure is designed to ease pressure on existing river crossings and accommodate rising vehicular traffic in Assam’s largest city, Guwahati.
பிரம்மபுத்திராவின் இரு கரைகளையும் இணைக்கும் 8.4 கிலோ மீட்டர் இணைப்பு வழித்தடத்தின் ஒரு பகுதியாக இந்த 1.24 கி.மீ பாலம் அமைகிறது. இது பல முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை இணைக்கிறது.
இந்தியாவின் மிகவும் சவாலான நதி நிலப்பரப்புகளில் ஒன்றான இது ஒரு பெரிய பொறியியல் சாதனை என்று நிறுவன இயக்குனர் ரோஹித் சிங்லா விவரித்துள்ளார். மாறுபட்ட நதி நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, கவனமாகத் திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் தேவைப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

