சர்ச்சையைக் கிளப்பிய காணொளி: வாரணாசி கோயிலில் ‘கேக்’ வழங்க தடை

1 mins read
8ef693ee-4a62-471e-bcf2-fd500e14835c
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி நகரம். - படம்: incredibleindia.gov.in / இணையம்

வாரணாசி: இன்ஸ்டகிராமில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி நகரில் உள்ள கால பைரவர் கோயிலில் பிறந்தநாளை ‘கேக்’ வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்.

அச்செயல் காணொளியில் பதிவு செய்யப்பட்டது. மம்தா ராய் எனும் சமூக ஊடகப் பிரபலம், சன்னிதானத்தில் ‘கேக்’கை வெட்டி முதல் துண்டை இறைவனுக்கு வழங்கியது அந்தக் காணொளியில் தெரிந்தது.

அச்செயல் சமூக ஊடகப் பயனர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், இப்படி நிகழ்வது ஒன்றும் புதிதல்ல என்று ஆலயத்தின் மூத்த குருக்கள் நவீன் கிரி கூறினார்.

மம்தா ராய், சமூக ஊடகங்களில் பிரபலமானவர் என்பது ஆலய அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து கோயிலுக்குள் ‘கேக்’ வெட்டி வழங்குவதை நிர்வாகக் குழு தடை செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள சமய அமைப்பு ஒன்று, அச்செயல் கோயிலின் புனிதத்தைப் பாதிக்கும் ஒன்று என கண்டனம் தெரிவித்தது.

அக்குழு, மம்தா ராய்க்கு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான ஆவணத்தை அவருக்கு அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்