கோல்கத்தா: இந்தியாவின் மேற்குவங்க மாநிலமான கோல்கத்தாவில் உள்ளூர் ரயிலில் பெண்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளது.
இது குறித்த காணொளியை டுவிட்டர் பயனாளரான ஆயூஷி தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் ரயிலில் பெண்கள் கூச்சலிடுவதும், அலறுவதும், ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக்கொள்வதும், ஒருவரையொருவர் முகத்தில் குத்துவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
சக பயணிகள் சண்டையைத் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. அந்தக் காணொளியின் முடிவில் சண்டையில் ஈடுபட்ட பெண்களில் ஒருவர், தனது அருகில் நிற்கும் ஆடவர் மீது பொருள் ஒன்றை வீசுவதையும் அதில் காணமுடிந்தது.
அந்தப் பெண்களுக்கிடையே ஏன் சண்டை மூண்டது என்பது பற்றி அந்தக் காணொளியில் எந்தத் தகவலும் இல்லை.
பொதுப் போக்குவரத்தில் பயணிகள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான வருத்தமளிக்கும் நிகழ்வாகும் என்று இணையவாசிகள் இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

