கர்ப்பிணியர் பரிசோதனைக் காணொளிகள் ஆபாச இணையத் தளங்களுக்கு விற்பனை

கர்ப்பிணியர் பரிசோதனைக் காணொளிகள் ஆபாச இணையத் தளங்களுக்கு விற்பனை

1 of 2
சித்திரிப்புப் படம்: ஊடகம்
படம்: ஊடகம்

05 Nov 2025 - 8:35 pm

1 mins read

ராஜ்கோட்: குஜராத்தில் இயங்கி வரும் தனியார் மகப்பேறு மருத்துவமனையின் ரகசிய கண்காணிப்புக் கேமரா அமைப்பில் ஊடுருவி (ஹேக்), காணொளிகள் திருடப்பட்டன.

அந்தக் காணொளிகள் யூடியூப் தளத்தில் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யப்படும் வழக்கமான பரிசோதனைகள் அடங்கிய காணொளிக் காட்சிகளைப் பணத்துக்காக ஒரு கும்பல் ஆபாச இணையத்தளங்களுக்கு விற்பனை செய்துள்ளது.

ராஜ்கோட் மாவட்டத்தில் இயங்கி வரும் அந்த மருத்துவமனையில் திருடப்பட்ட காணொளிகளுக்கு ரூ.700 முதல் ரூ.4,000 வரை விலை நிர்ணயித்து விற்றுள்ளனர்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் மருத்துவமனைகளின் கண்காணிப்புக் கேமராக்களில் இருந்து இவ்வாறு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணொளிகள் திருடப்பட்டுள்ளன.

இந்தக் காணொளிகளை முழுமையாகப் பார்க்க ‘டெலிகிராம்’ செயலி மூலம் பணம் செலுத்தவேண்டும் என்று சமூக ஊடகங்களில் உரிய இணைப்புகளுடன் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை இந்த வக்கிரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு காவல்துறை வலைவீசியுள்ளது.

குறிப்புச் சொற்கள்