திருப்பதியில் பெண்களுக்கு உதவும் விஜய் ரசிகர் அஜித்

திருப்பதியில் பெண்களுக்கு உதவும் விஜய் ரசிகர் அஜித்

1 mins read
3bd8de39-9cbe-4487-a0cb-40023c8cea9d
ஓட்டுநர் அஜித் தனது ஆட்டோவில் ஏறும் பெண் பயணிகளிடம் இருந்து அடையாளக் கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே பெறுகிறார். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

அமராவதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் திருச்சானூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஜித் என்பவர், பெண் பயணிகளிடம் இருந்து வெறும் 5 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலித்து சமூக ஊடகங்களில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

தமிழக முதல்வரும் நடிகருமான விஜய்யின் தீவிர ரசிகரான ஓட்டுநர் அஜித், திருச்சானூர் முதல் திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையம் வரையிலான பாதையில் ஆட்டோ இயக்கி வருகிறார்.

வழக்கமாக இந்தப் பாதையில் பயணிக்கும் மற்ற ஆட்டோக்களில் ஒருவருக்கு 30 முதல் 40 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பேருந்துகளில் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

ஆனால், ஓட்டுநர் அஜித் தனது ஆட்டோவில் ஏறும் பெண் பயணிகளிடம் இருந்து அடையாளக் கட்டணமாக 5 ரூபாய் மட்டுமே பெறுகிறார்.

நடிகர் விஜய், தமிழக முதல்வரான பிறகு, தம்மால் இயன்ற சிறிய உதவியை மக்களுக்குச் செய்ய விரும்பியதாகவும் அதனால்தான் பெண் பயணிகளுக்கு சலுகை அளிப்பதாகவும் கூறுகிறார் ஓட்டுநர் அஜித்.

பொருளியல் நெருக்கடிச் சூழலில், திருப்பதி வரும் பெண்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் தமது சேவை உதவியாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்