ராகுல் காந்தியை விஞ்சிய விஜய்

ராகுல் காந்தியை விஞ்சிய விஜய்

1 mins read
573bd3ca-702d-4f61-95cf-514f14c8e692
ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்வதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது தமிழக முதல்வர் விஜய்யை 1.87 கோடி பேர் பின்தொடர்கின்றனர். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: இன்ஸ்டகிராமில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிடத் தமிழக முதல்வர் விஜய்யைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இளையர்களைச் சென்றடைய மின்னிலக்க ஊடகங்களே ஆகச்சிறந்தவை என நிபுணர்கள் கூறிவரும் நிலையில், இன்ஸ்டகிராம் வாயிலாக இளையர்களை ஈர்க்க வேண்டுமென மத்திய அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

இன்ஸ்டகிராமில் பிரதமர் மோடியை 10.2 கோடி பேர் பின்தொடர்கின்றனர். இது உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.

அவருக்கு அடுத்தபடியாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா (3.22 கோடி), நிதின் கட்காரி (66 லட்சம்) ஆகியோர் உள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை 1.47 கோடி பேர் பின்தொடர்வதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், தற்போது அவரை விஞ்சியுள்ளார் முதல்வர் விஜய்.

தமிழக முதல்வரை இன்ஸ்டகிராமில் 1.87 கோடி பேர் பின்தொடரும் நிலையில், அசாருதீன் ஒவைசி (1.25 கோடி), கெஜ்ரிவால் (40 லட்சம்), பிரியங்கா காந்தி (40 லட்சம்), மு.க.ஸ்டாலின் 23 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

அண்மைய சில வாரங்களாக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின்போது ‘இன்ஸ்டகிராம் ரீல்ஸ்’, காணொளிகள் லட்சக்கணக்கானோரால் பதிவிடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்