புதுடெல்லி: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு நாடு சுதந்திரம் அடைந்து, 79 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பேருந்துச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை அக்கிராம மக்கள் திருவிழாவைப்போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
குர்தல் என்ற பெயருடைய அந்தக் கிராமத்துக்குள் அரசுப்பேருந்து முதன்முறையாக நுழைந்தபோது கிராம மக்கள் சாலையின் இருபுறமும் வரிசையாக நின்று அதன் மீது மலர்களைத் தூவி வரவேற்றனர்.
மேலும், பேருந்துக்கு ஆரத்தி எடுத்து, மேளதாளத்துடன் நடனக்குழுவினர் நடனமாடி வரவேற்றனர்.
ராஜஸ்தான் பாரம்பரிய வழக்கப்படி, பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் தலைப்பாகை அணிவித்து மாலைசூடி கௌரவிக்கப்பட்டனர்.
ராஜஸ்தானின் கேக்கிரி பகுதியில் அமைந்துள்ள குருர்ல், கேரோட் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பேருந்துச்சேவைக்காக இத்தனை ஆண்டுகளாகக் காத்துக்கிடந்தனர்.
அவர்களின் நீண்ட நாள் போராட்டத்துக்குப் பலனாகப் பேருந்துச்சேவை தொடங்கியுள்ளது.


