கொப்பால்: கர்நாடகாவின் கொப்பால் மாவட்டம் உட்பட பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக கொப்பால் மாவட்டம் கங்காவதியின் தானாபூர் கிராமத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 5) காலை திடீரென வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
அந்தச் சத்தத்தை கேட்டு வெளியே வந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீட்டின் இடிந்த பகுதியில் வசித்து வந்த பிரகாஷ் இடிபாடுகளில் சிக்கியிருந்தார். அவருடையக் குடும்பத்தினர் மற்றொரு அறையில் இருந்ததால், உயிர் தப்பினர். கணவரை மீட்க அவரது மனைவி, உதவி கோரி அலறினார்.
தீயணைப்பு படையினர் வருவதற்குள் கிராம மக்கள் மண்ணில் புதைந்திருந்த பிரகாஷை மீட்டனர்.
அவர், சிகிச்சைக்காக அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.