வாக்குத் திருட்டு தேச விரோதச் செயல்: ராகுல் காந்தி

1 mins read
d0765f2e-10fa-41c9-80ec-5f84226fe762
மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பேசினார் ராகுல் காந்தி. - படம்: தினகரன்

புதுடெல்லி: மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “வாக்குத் திருட்டுதான் மிகப் பெரிய தேச விரோதச் செயல்,” என்று காட்டமாகப் பேசினார்.

இந்தியா என்பது 150 கோடி மக்களின் பிணைப்பு. இதற்கு ஆதாரமாக இருப்பது வாக்குகள். மக்களவையோ, மாநிலங்களவையோ, சட்டப் பேரவையோ, பஞ்சாயத்துகளோ வாக்குகள் இல்லாவிட்டால் இவை எதுவும் இருக்காது. ஆனால், இதைக் கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயல்கிறது.

“குறிப்பாகத் தேர்தல் ஆணையம், அமலாக்கத் துறை, என்ஐஏ, சிபிஐ போன்ற நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவால் கைப்பற்றப்பட்டுள்ளன.

“ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தேர்தலை வடிவமைக்க தேர்தல் ஆணையம் இவர்களுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறினார்.

“தேர்தல் ஆணையராக யார் வர வேண்டும் என்பதில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏன் இத்தனை அக்கறை காட்டுகின்றனர்? வாக்குத் திருட்டைவிட மிகப் பெரிய தேச விரோதச் செயல் வேறில்லை,” என்று அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்திக்குப் பதிலளித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, “நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமைகொள்கிறேன்.

“முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நெறிமுறைகளில் சமரசம் செய்து கொண்ட கட்சி காங்கிரஸ்,” என்று குற்றம் சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்