மேற்கு வங்கம்: ஜூன் 1 முதல் மகளிருக்கு ரூ.3,000, இலவசப் பேருந்துப் பயணம் அமல்

மேற்கு வங்கம்: ஜூன் 1 முதல் மகளிருக்கு ரூ.3,000, இலவசப் பேருந்துப் பயணம் அமல்

1 mins read
764d4fc0-0b4c-4859-9f1d-c3eeb2e1e1f4
மேற்கு வங்கத்தில் புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி. - படம்: மாலை மலர்

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அன்னபூர்ணா திட்டத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி, அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அத்திட்டங்கள் ஜூன் 1 முதல் மாநிலம் முழுவதும் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும் என அமைச்சர் அக்னிமித்ரா பவுல் தெரிவித்துள்ளார்.

முந்தைய மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் மசூதி இமாம்கள், கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்தர மதிப்பூதி யத்தை நிறுத்த அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதற்கு, நலத்திட்டங்கள் மத அடிப்படையில் இருக்கக் கூடாது என அரசு விளக்கமளித்துள்ளது.

முஸ்லிம் சமூகப் பிரிவுகளை இணைத்து முந்தைய அரசு தயாரித்த சர்ச்சைக்குரிய ஓபிசி பட்டியலையும் கைவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத அடையாளங்களைத் தவிர்த்து கல்வி, பொதுவான மக்கள் நலனுக்கே தற்போதைய அரசு முக்கியத்துவம் அளிக்கும் எனப் புதிய அமைச்சரவை அறிவித்துள்து.

குறிப்புச் சொற்கள்