தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லிக்குப் பின் மேற்கு வங்கம்: பாஜக

1 mins read
088146c6-6e9f-4834-949e-2a9315bee88c
(இடமிருந்து) பாரதிய ஜனதா கட்சியின் சுவேந்து அதிகாரி, திரிணாமூல் காங்கிரசின் மம்தா பானர்ஜி. - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: டெல்லியில் வென்றதை அடுத்து மேற்கு வங்கத்திலும் வெற்றி பெறுவோம் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சியில் இறங்கியிருந்தது . எனினும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அந்தக் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அங்கு பாஜக மேற்கு வங்கத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 2021 சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்த அந்தக் கட்சி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக உள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்கும் உரிமை பெற்றுள்ளது. இதைச் சுட்டிக்காட்டும் மேற்கு வங்க பாஜக தலைவர்கள் இனி அடுத்து மேற்கு வங்கத்தையும் பிடிப்போம் என்று சூளுரைத்துள்ளனர்.

இது பற்றிக் கூறிய பாஜகவின் சுவேந்து அதிகாரி, டெல்லியில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறோம். இனி 2026ல் மேற்கு வங்கத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

இவருடன் மற்றொரு தலைவரான சுகந்தா மஜும்தார், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மக்கள் பாஜகவையே தேர்ந்தெடுப்பர் என்று தெரிவித்தார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்