நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் திங்கள்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று வீட்டுக்குள் புகுந்தது.
திடீரென்று சாலையில் நின்ற காட்டு யானை சாலையோரம் நிறுத்தியிருந்த ஒரு காரை சேதப்படுத்தியது.
தொடர்ந்து நடந்து சென்ற யானை ஆக்ரோஷத்துடன் ஒரு வீட்டின் சுவரை இடித்து கூரையை சேதப்படுத்தி வீட்டுக்குள் புகுந்து மறுபக்கம் வெளியே சென்றது.
அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் காட்டு யானை அங்கிருந்து வெளியே சென்றது.
அதிஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.