தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூகல் உதவியுடன் குடும்பத்துடன் மீண்டும் இணைந்த மனநலம் பாதித்த பெண்

1 mins read
b419a78e-6343-4750-894b-e9c2abaf2c86
கூகல் உதவியை நாடிய தொண்டூழியர்கள். - படம்: ஊடகம்

உத்தரப் பிரதேசம்: தாணேவில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூகல் தேடலின் உதவியுடன் குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்சைச் சேர்ந்தவர் ஃபுல்தேவி சந்த் லால் (50). மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண், டிசம்பர் 2024ல் ஷாஹாபூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து காணாமல் போனார்.

வறுமையில் வாடிய நிலையில் இருந்த அவரை பால்கர் மாவட்டத்தின் நல்லசோபரா பகுதியில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர் தன்னார்வ தொண்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனிடையே அவரைப் பராமரித்து வந்த தன்னார்வலர்கள் கூகல் தேடலைப் பயன்படுத்தி அப்பெண்ணின் கிராமத்தைக் கண்டுபிடித்தனர்.

பிறகு ஆசிரமத்தில் அப்பெண் இருப்பது குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அந்தப் பெண்ணின் உறவினர்கள், ஆசிரமத்தில் இருந்து அந்தப் பெண்ணை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்