பாட்னா: ஓடும் ஆம்புலன்சில் 26 வயது பெண் ஒருவர் ஆடவர்கள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் வியாழக்கிழமை (ஜூலை 24) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் புத்த கயா நகரில் நிகழ்ந்தது.
அப்பெண் தொண்டூழியக் காவல்படைக்கான ஆள்சேர்ப்பில் பங்கெடுத்ததாகவும் அப்போது அவர் மயங்கி விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அப்பெண் சீரழிக்கப்பட்டார்.
அப்போது அப்பெண் சுயநினைவின்றி கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் தொழில்நுட்பரும் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து, அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் தொழில்நுட்பரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பீகார் காவல்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இருவரின் பதில்கள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும், அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு ஆடவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.