பயணிகளை அச்சுறுத்திய 'சந்திரமுகி'

பயணிகளை அச்சுறுத்திய 'சந்திரமுகி'

1 mins read
cdcd80d0-32c7-4c05-aa43-72bdf6220b23
-

மலையாளத்தில் 1993ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடுபோட்ட படம் 'மணிச்சித்திரத்தாழு'. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் 'சந்திரமுகி' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் கண்டது. ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா உள்ளிட்ட பலர் அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

'நாகவல்லி'யாக மலையாளத்தில் ஷோபனாவும் 'சந்திரமுகி'யாக தமிழில் ஜோதிகாவும் நடித்து அசத்திய வேடம், எண்ணற்ற ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில், சந்திரமுகி வேடத்தில் மெட்ரோ ரயலில் பயணம் செய்து, பயணிகளை பீதிக்குள்ளாக்க முயன்றார் இந்தியப் பெண் ஒருவர்.

இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது.

சந்திரமுகி வேடத்தில் ரயில் பெட்டிக்குள் நுழைந்த அவர், அங்கிருந்த பயணிகளை அச்சுறுத்தப் பார்க்கிறார். அவரைக் கண்டு ஒரு சிலர் அஞ்சினாலும் மற்றவர்கள் எவ்விதப் பதற்றமும் அடையவில்லை.

சமூக ஊடகவாசிகள் சிலர் இதுபற்றி தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

"இதனை மேடையில் செய்திருந்தால் அப்பெண் நல்ல நடிகையாகத் தெரியலாம். மேடையில்தான் நாடகத்திற்கு மதிப்பு, வாழ்க்கையில் அன்று!" என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

"இவர் எப்படிப் பாதுகாப்புச் சோதனையைக் கடந்து ரயிலுக்குள் வந்தார் என்பது இன்னும் எனக்கு வியப்பளிக்கிறது," என்றார் இன்னோர் இன்ஸ்டகிராம்வாசி.

View post on Instagram