தம்முடன் வேலை பார்க்கும் சக ஆண் ஊழியர் ஒருவர் கட்டி அணைத்ததும் தடுமாறிப் பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் ஜூலை 16ஆம் தேதி பிற்பகல் 2.40 மணியளவில் தொம்பிவளி நகரின் ஒரு கட்டடத்தில் நடந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்று காட்டுகிறது.
நீலநிற மேல்சட்டை அணிந்திருந்த பெண் ஒருவர், கைப்பிடிச் சுவர் ஓரத்தில் உட்கார்ந்திருப்பதைக் காணொளியில் பார்க்க முடிகிறது. கேமராவில் தெரியாதபடி நின்ற ஒருவரிடம் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார்.
திடீரென அந்த நபர் பெண்ணைக் கட்டியணைத்ததை அடுத்து, இருவரும் பின்னோக்கிச் சாய்ந்துவிட்டனர்.
அந்தப் பெண் அப்படியே சாய்ந்து கீழே விழுந்துவிட்டார்.
ஆடவர் எப்படியோ கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு உயிர்தப்பினார்.
இன்னோர் ஆடவருடன் அந்த ஆடவர் மாடிப்படிவழி கீழே செல்வதையும் வழிப்போக்கர்கள் கீழே எட்டிப் பார்ப்பதையும் காணொளியில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், உயிரிழந்த பெண் 31 வயது நகினா தேவி மஞ்சிரம் என்றும் அவர் அந்தக் கட்டடத் துப்புரவாளர் என்றும் அறியப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
பெண்ணுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
பெண்ணின் மரணம் குறித்து கூடுதல் தகவல்கள் சேகரிக்க, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

