கேரளத் துணை சபாநாயகராகப் பெண் எம்எல்ஏ தேர்வு

கேரளத் துணை சபாநாயகராகப் பெண் எம்எல்ஏ தேர்வு

படம்: மாத்ருபூமி

03 Jun 2026 - 4:54 pm

1 mins read

திருவனந்தபுரம்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளச் சட்டமன்றத் துணை சபாநாயகராகப் பெண் எம்எல்ஏ ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நடந்த தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.

சபாநாயகர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஷானிமோள் உஸ்மானும் இடசாரி கூட்டணிச் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மொஹ்சினும் போட்டியிட்டனர்.

இதில், ஷானிமோள் உஸ்மான் பதிவான மொத்த வாக்குகளில் 99 வாக்குகள் பெற்று வாகைசூடினார். அவரை எதிர்த்துக் களமிறக்கப்பட்ட மொஹ்சினுக்கு 34 வாக்குகள் கிடைத்தன.

துணை சபாநாயகர் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் வாக்களிக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களும் இடசாரிக் கூட்டணியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவும் பேரவைக்கு வராததால் வாக்களிக்கவில்லை.

ஷானிமோள் உஸ்மான் கேரளச் சட்டமன்றத்தின் நான்காவது பெண் துணை சபாநாயகர் ஆவார்.

மேலும், 35 வருடங்களுக்குப் பிறகு கேரளச் சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக மீண்டும் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கேரளாசபாநாயகர்எம்எல்ஏகாங்கிரஸ்