தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் மீட்பு

1 mins read
47122aac-827e-4318-854a-fefea7af3f2f
மும்பை போரிவலி ரயில் நிலையத்தில் ரயிலால் இழுத்துச் செல்லப்பட்ட அப்பெண்ணை ரயில் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி காப்பாற்றினார். - படம்: ஊடகம்

மும்பை: இந்தியாவின் மும்பை நகரில் ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் காப்பாற்றப்பட்டார்.

போரிவலி ரயில் நிலையத்தில் இறங்க அப்பெண் முற்பட்டபோது அவர் கீழே விழுந்தார்.

அதையடுத்து, அவரை ரயில் தளமேடையில் இழுத்துச் சென்றது.

நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக் காட்சியைக் காட்டும் காணொளியை இந்திய ரயில்வே அமைச்சு வெளியிட்டது.

ரயிலால் இழுத்துச் செல்லப்பட்ட அப்பெண்ணை ரயில் நிலையத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி காப்பாற்றினார்.

சற்று தாமதித்திருந்தாலும் அப்பெண் ரயிலுக்கும் தளமேடைக்கும் இடையில் உள்ள இடைவெளிக்குள் விழுந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு நேர்ந்திருந்தால் அப்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விரைவாகச் செயல்பட்டு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பாதுகாவல் அதிகாரியை அமைச்சு வெகுவாகப் பாராட்டியது.

குறிப்புச் சொற்கள்