லக்னோ: பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண்ணின் உடலை உத்தரப் பிரதேச மாநில காவல்துறையினர் கண்டெடுத்தனர்.
அங்குள்ள பவுகேதா கிராமத்தின் நுழைவுப் பாதை அருகே சந்தேகத்திற்கிடமாக ஒரு பெட்டி இருந்துள்ளது. சந்தேகமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்தனர். பெட்டியை மீட்டு திறந்து பார்த்தபோது அதற்குள் ஒரு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டு அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அந்த உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
இறந்த பெண் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என விசாரணை நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


