தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பையின் நடமாடும் இலவசக் கழிப்பறைப் பேருந்தால் பெண்களுக்கு ஆறுதல்

2 mins read
f501f4af-e135-4660-a437-0e9b188468df
முழு வசதிகளுடன் ஐந்து கழிப்பறைகள் இந்த நடமாடும் இலவசப் பேருந்தில் உள்ளன. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: அடிப்படைச் சுகாதார வசதி என்பது அடிப்படை உரிமையாகும். ஆனால், மும்பையின் சேரிப் பகுதிகளில் வாழும் பெண்கள் பலருக்கு, சுகாதாரமான குளியல் வசதிகள் கிட்டுவது பெரும் போராட்டமாக உள்ளது.

இந்த விவகாரத்தைக் கையாள, மகாராஷ்டிர அரசாங்கமும் பிரிஹான்மும்பை நகராட்சி நிறுவனமும் இணைந்து வித்தியாசமான ஒரு தீர்வை வழங்கியுள்ளன.

கண்டிவளி பகுதியைச் சேர்ந்த பெண்களுக்காக நடமாடும் கழிப்பறைச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமான ஒரு பேருந்தை, உயர் தொழில்நுட்ப கழிப்பறை வசதியாக இத்திட்டம் மாற்றியுள்ளது. தேவைப்படுவோர் இலவசமாக இந்த வசதியை அணுகலாம்.

அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், நடமாடும் கழிப்பறை சீக்கிரமாகவே பிரபலமடைந்துள்ளது. இலவசச் சேவையைப் பயன்படுத்தப் பல பெண்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஐந்து கழிப்பறைகளும் அவை ஒவ்வொன்றிலும் கை, உடம்புக்கான சோப்பு, நீர்க்குழாய், வாளி, ஷாம்பூ, குளியல் வசதி ஆகியவையும் அமைந்துள்ளன. தண்ணீர் விநியோகம்

அதிகம் தேவைப்படும் சேவையாக இது இருந்து வரும் அதேவேளை, இரு பெண்களுக்கு வேலைவாய்ப்புகளும் இத்திட்டத்தின்வழி உருவாக்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் விரைவில் வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கண்டிவளி சபைத் தொகுதியில் பெண்களுக்காக ஒவ்வொரு நாளும் 12 மணி நேரத்திற்குக் கழிப்பறை திறந்திருக்கும் என்று முன்னதாக வெளிவந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அறிக்கை ஒன்று தெரிவித்திருந்தது. ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு ஒவ்வொரு பெண்ணும் குளிக்க இயலும்.

‘பி த சேஞ்ச்’ எனும் அமைப்பை நடத்தி வரும் மூன்று சகோதரிகள், இந்த நடமாடும் குளியல் வசதியைப் பராமரித்து வருகின்றனர். உள்ளூர்ப் பெண்களை வெகுவாக ஈர்த்துவரும் இத்திட்டம், மேலும் பலரால் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்