தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கழிவறைக்குக்கூட போக முடியாமல் தவிக்கும் ஊழியர்கள்

1 mins read
665f9fa1-f070-4b9d-9b5e-7e12bb709de1
வெப்ப அலையில் ஊழியர்கள் கூடுதல் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இந்திய ஊடகம்

மும்பை: கடுமையான வெப்ப அலைகளுக்கு இடையே, ‘அமேசான் இந்தியா’ நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் வேதனைமிக்க ஒரு சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

பொருள் இருப்பு கிடங்குகளில் 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் இடைவேளை இன்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதால் தங்களால் கழிவறைக்குக்கூட போக முடியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இலக்கை அடையும்வரை ஓய்வின்றி, நீரின்றி, கழிவறையின்றி கடும் வெப்பத்தில் பணிகளை முடித்தாக வேண்டும் என்ற உறுதிமொழியை ஊழியர்கள் எடுத்தாக வேண்டும் என்று அமேசான் இருப்புக் கிடங்கு ஊழியரான பூஜா கூறினார்.

சில பெண்கள் சூட்டைத் தணிப்பதற்குக் கழிவறைகளில் தஞ்சம் புகுவதாக இன்னோர் ஊழியரான ரேவிஷ் குறிப்பிட்டார்.

இவ்வாறு வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது, வெப்ப அலை வீசும் தற்போதைய நிலையில் ஊழியர்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தி வருவதாக அமேசான் இந்தியா தொழிலாளர்கள் அமைப்பின் ஒங்கிணைப்பாளர் தர்மேந்திர குமார் தெரிவித்தார்.

இத்தகைய இருப்புக் கிடங்குகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளும் வகையில் உடனடி நடைமுறைகளை அமல்படுத்துமாறு தொழில், வேலைவாய்ப்பு அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்