தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகக் குள்ளமான உடற்கட்டழகருக்குத் திருமணம்

1 mins read
026a655c-42a2-485c-91af-92f6058adf56
தம்மைப் போன்றே குள்ளமானவரான ஜெயாவை அண்மையில் கைப்பிடித்தார் பிரதிக். படம்: இன்ஸ்டகிராம்/பிரதிக் -

மும்பை: உலகின் ஆகக் குள்ளமான உடற்கட்டழகர் என்ற கின்னஸ் சாதனைக்குச் சொந்தக்காரரான பிரதிக் விட்டல் மொகித்தே, 28, திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.

மூன்று அடி நான்கு அங்குல உயரமே கொண்ட இவர், 22 வயதான ஜெயாவைக் கைப்பிடித்தார். திருவாட்டி ஜெயாவும் திரு பிரதிக்கைப்போல் குள்ளமானவர்தான்.

உடற்கட்டழகராக விரும்பிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த திரு பிரதிக், கடந்த 2012ஆம் ஆண்டில் அதற்கான பயிற்சிகளைத் தொடங்கினார். தமது உயரம் காரணமாக தொடக்கத்தில் இவர் உடற்பயிற்சிகளைச் செய்ய பெரும் சிரமப்பட்டார். ஆனாலும், மனந்தளராமல் விடாமுயற்சியுடன் இவர் செயல்பட்டார்.

View post on Instagram
 

உயரம் காரணமாக தொடக்கத்தில் இவர் உடற்பயிற்சிகளைச் செய்ய பெரும் சிரமப்பட்டார். ஆனாலும், மனந்தளராமல் விடாமுயற்சியுடன் இவர் செயல்பட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதன்முதலாக உடற்கட்டழகுப் போட்டியில் திரு பிரதிக் கலந்துகொண்டார்.

அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு உலகின் ஆகக் குள்ளமான உடற்கட்டழகராக கின்னஸ் சாதனை அமைப்பு இவரை அங்கீகரித்தது.

"கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதனைச் சாதித்ததே என் வாழ்க்கையில் ஆகப் பெரிய விஷயம்," என்றார் திரு பிரதிக்.

View post on Instagram
 

தம் மனைவி ஜெயாவை முதன்முதலில் பார்த்ததுமே தமக்குப் பிடித்துப்போனதாக இவர் குறிப்பிட்டார்.

சென்ற வாரம் நடந்த தமது திருமண நிகழ்வு குறித்த காணொளியையும் இவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.