இந்திய மல்யுத்த சங்கத் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று டெல்லி காவல்துறையினர் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
பிரிஜ் பூஷன் சிங், பெண் மல்யுத்த வீராங்கணைகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
காவல்துறை பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
போராட்டம் தற்போது நீதிமன்ற காதுகளுக்கு சென்றுவிட்டதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரிஜ் பூஷன் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் மீது வழக்குதொடுக்க வேண்டும் என்று போராடினர். அரசாங்கம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் போராட்டம் கலைக்கப்பட்டது.
அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது மீண்டும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர் மல்யுத்த வீரர்கள்.

