பெங்களூரு: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பயன்படுத்தப்பட்ட தவறான இந்திய வரைபடம் காரணமாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
கர்நாடகாவில் வியாழக்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்காக அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட மேடையில் இந்திய வரைபடம் வைக்கப்பட்டு இருந்தது. அதில் ஜம்மு, காஷ்மீர் பகுதி காணப்படவில்லை.
இதையடுத்து, பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், வைக்கப்பட்ட பதாகைகள் ஆகியவற்றில் தவறான இந்திய வரைபடம் இடம்பெற்றுள்ளதாக கர்நாடகா பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

