புதுடெல்லி: யோகாவை ஒரு போட்டி விளையாட்டாக அங்கீகரிக்க ஐக்கிய அரபுச் சிற்றரசின் தலைநகர் அபுதாபியில் ‘இந்திய இல்லம்’ அமைக்கப்பட உள்ளது.
ஐக்கிய அரபுச் சிற்றரசு, யோகாவை ஒரு போட்டி விளையாட்டாக அறிவிக்க உள்ளது, அதன் விளையாட்டுக் கட்டமைப்பில் இந்தியாவின் யோகாவை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் வளைகுடா நாடு. மேலும், கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக அபுதாபியில் ‘இந்தியா இல்லம்’ அமைப்பதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க இரு நாட்டுப் பேராளர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையே கலாசாரப் பரிமாற்றம், மாணவர் பரிமாற்றம், இரு தரப்பு வரலாற்றை முன்னிலைப் படுத்தும் நிலையமாக இந்த இல்லம் செயல்படும். இது யோகா பயிற்சி நிலையமாகவும் செயல்படும். மேலும் அபுதாபி, யோகாவை ஒரு போட்டி விளையாட்டாகவும் அறிவிக்க உள்ளது.
அண்மையில் இந்தியப் பிரதிநிதிகளும் ஐக்கிய அரபு சிற்றரசின் பிரதிநிதிகளும் இணைந்து நடத்திய கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அபுதாபியில் இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஓராண்டுக்கு முன்பாக இந்துக் கோயில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவின் இன்னொரு கலாசார அடையாளமாக ‘இந்திய இல்லம்’ அபுதாபியில் அமைக்கப்பட உள்ளது.
கலை மற்றும் கலாசாரத்தில் உறவுகளை வலுப்படுத்துதல், மாணவர் பரிமாற்றம் மற்றும் இருதரப்பு வரலாற்றை முன்னிலைப்படுத்துவதற்கான நிலையமாக இது செயல்படும். மேலும், இது யோகா பயிற்சி மையமாகவும் செயல்பட உள்ளது. மேலும், யோகாவை அபுதாபி ஒரு போட்டி விளையாட்டாகவும் அறிவிக்க உள்ளது.
அபுதாபியில் அமைக்கப்படவிருக்கும் ‘இந்திய இல்லத்தில்’ ஒரு கலைக்கூடம், கலாசார அரங்கம் மற்றும் யோகா பயிற்சி மையம் உள்ளிட்ட மேலும் பல கலாசாரத்தையொட்டிய துறைகளும் சேர்க்கப்படும். கலைஞர்கள், மாணவர்கள், திறனாளர்கள் இந்திய - அரபு உறவுகளைக் கொண்டாடும் திட்டங்களில் ஒத்துழைக்க இது ஒரு மையமாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“ஐக்கிய அரபுச் சிற்றரசு ஒரு பெரிய இந்திய சமூகத்தின் தாயகமாகும், நமது கலாசார கட்டமைப்பிற்கு இந்திய சமூகம் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. எனவே, இந்தியப் பாரம்பரிய யோகாவை ஒரு போட்டி விளையாட்டாக அங்கீகரிப்பது அந்தப் பாரம்பரியத்தைப் போற்றுவதாக அமைகிறது,” என்று ஐக்கிய அரபுச் சிற்றரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

