புதுடெல்லி: பிரபல யோகா ஆசிரியர் (குரு) பாபா சிவானந்த் காலமானார். அவருக்கு வயது 128.
கடந்த 1896ம் ஆண்டு பங்ளாதேஷில் உள்ள சில்ஹெட் மாவட்டத்தில் பிறந்த பாபா சிவானந்த், தனது ஆறாவது வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார்.
பின்னர், யோகாசனம் கற்றுக்கொண்டு, ஓர் ஆசிரமத்தில் சேர்ந்து ஆன்மிகவாதியாக மாறினார்.
நூற்றுக்கணக்கானோருக்கு யோகா பயிற்சி அளித்து வந்த பாபா சிவானந்த், கடந்த 2024ஆம் ஆண்டு அனைத்துலக யோகா தினத்தையொட்டி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு யோகா முத்திரைகளைச் செய்து காட்டி அனைவரையும் கவர்ந்தார்.
அதன் பிறகே இவரைப் பற்றி அனைவருக்கும் தெரியவந்தது. மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது.
பாபா சிவானந்த் மறைவுக்கு பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.