12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கு இளையர் நெட்டோட்டம்

12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கு இளையர் நெட்டோட்டம்

1 of 2
படம்: இந்து தமிழ் திசை
படம்: இன்ஸ்டாகிராம்

16 Oct 2026 - 7:50 pm

1 mins read

பாட்னா: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது மோனு மேதுர்பாலா தன் தாயார் குணமடைந்ததற்காக இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுக்கு ஓட்டம் மேற்கொண்டுள்ளார்.

அவரது தாய் தீவிர நோய்ப் பாதிப்புக்கு ஆளாகியிருந்தபோது நாட்டின் அனைத்து ஜோதிர்லிங்கத் தலங்களுக்கும் ஓடிச் சென்று தரிசனம் செய்வதாக மோனு வேண்டிக்கொண்டார்.

அதன்படி அவரது தாயின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து, மார்ச் 15ஆம் தேதி முதல் ஆன்மிக ஓட்டத்தை அவர் தொடங்கினார். அன்றாடம் ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தூரம் ஓடும் மோனு, இதுவரை 8,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்துள்ளார்.

அவரது ஆன்மிகப் பயணக் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

வழியில் அவரைக் காண்போர் ஆச்சரியத்துடன் விசாரிப்பதுடன், ஊக்கமளித்தும் வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்