தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞர் கைது

1 mins read
cddbdfe6-bd6c-4ee3-822f-3255d4add9c7
கைதான மதன். - படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடகாவின், பெங்களூரில் சில மாதங்களுக்கு முன், நள்ளிரவில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை, பின்னால் இருந்து வந்த வாலிபர் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு தப்பியோடினார். தலைமறைவாக இருந்த அந்நபரை காவலர்கள் கைது செய்தனர்.

அதுபோன்ற சம்பவம், மீண்டும் பெங்களூரில் நடந்துள்ளது. விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் அபர்ணா ரதுாரி, 28. கடந்த வெள்ளிக்கிழமை (06.06.2025) காக்ஸ்டவுன் மில்டன் பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்த வாலிபர், அபர்ணா ரதுாரியை கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அந்நபர், தன்னை மாறுவேடத்தில் இருக்கும் காவலர் என்று கூறியுள்ளார்.

பின், மில்டன் பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த லிபா டிசோசா, 42, என்ற பெண்ணையும் கட்டிப் பிடித்து, உதட்டில் முத்தம் கொடுத்து விட்டு தப்பினார். அதிர்ச்சி அடைந்த இரு பெண்களும், புலிகேசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த காவலர்கள், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கருவிகளை ஆய்வு செய்து, பெங்களூரைச் சேர்ந்த மதன், 37, என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்