முடிவுக்கு வந்த ‘சோம்பி’ போதைப்பொருள் சர்ச்சை: இளையர் கைது

முடிவுக்கு வந்த ‘சோம்பி’ போதைப்பொருள் சர்ச்சை: இளையர் கைது

பொய்த் தகவல் பரப்பியதாக ஆடவர் கைது
படம்: இந்து தமிழ் திசை

11 Apr 2026 - 9:40 pm

1 mins read

பெங்களூரு: பெங்​களூருவின் எலஹங்​கா பகுதியைச் சேர்ந்த ஹேமந்த் குமார் என்னும் ஆடவர் சில நாள்களுக்கு முன்னர் ஒரு காணொளி வெளியிட்டார்.

அந்தக் காணொளியில், ‘‘இளையர் ஒரு​வர் சாலை​யில் இரண்டு மணி நேரமாக ஒரே இடத்​தில் அசை​யாமல் நிற்​கிறார். அவர் ‘சோம்​பி’ போதைப் பொருளை பயன்​படுத்​தி​ய​தால் உறைந்து போய் இருக்​கிறார்’’ எனக் கூறி​யிருந்​தார்.

இந்தக் காணொளி இந்திய அளவில் சர்ச்சை ஆனது. ‘சோம்பி’ போதைப்பொருள் எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்று பல கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் பெங்​களூரு காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் உத்​தர​வின்​படி, ‘சோம்​பி’ போதைப் பொருளை உட்கொண்டதாக நம்பப்படும் இளையரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் மருத்​து​வப் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

அதில், அவர் மது அருந்​தி​யதும் போதைப் பொருள் பயன்​படுத்​தாததும் தெரிய வந்​தது.

இதையடுத்து பொய்த் தகவல் பரப்பியதாக ஹேமந்த் குமாரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்​தனர்​.

குறிப்புச் சொற்கள்