இலங்கை அமைச்சருடன் சிங்கப்பூர் இரத்தினக்கல் வர்த்தக சங்கத்தினர் சந்திப்பு

இலங்கை அமைச்சருடன் சிங்கப்பூர் இரத்தினக்கல் வர்த்தக சங்கத்தினர் சந்திப்பு

1 mins read
c9a750b2-8bf5-44ed-9976-24656d46d6ef
இலங்கை அமைச்சருடன் சிங்கப்பூர் இரத்தினக்கல் வர்த்தக சங்கத்தினர். - செய்தி/படம்: சிங்கப்பூர் இரத்தினக்கல் வர்த்தக சங்கம்

சிங்கப்பூர் அனைத்துலக இரத்தினக்கல், ஆபரணக் கண்காட்சிக்கு இலங்கை வணிகர்கள் குழுவுக்குத் தலைமையேற்று வருகைபுரிந்திருந்த இலங்கை முதன்மைத் தொழில்துறை துணை அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, சிங்கப்பூர் இரத்தினக்கல் வணிகர்கள் சங்கத்தலைவர் திரு முஹம்மது பிலால், துணைத் தலைவர் அக்பர் சுல்தான், செயலாளர் ரபி அஹமது, பொருளாளர் ஜஹபர் சாதிக் ஆகியோருடனான சந்திப்பு ஜூலை 15ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.  சிங்கப்பூர் இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்புக் கூட்டத்தில் இலங்கை தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா, தூதரக உயரதிகாரி யசந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.  இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமான இரத்தினக்கல் வணிக உறவுகளை எவ்வாறு மேம்படுத்துவது, வலுப்படுத்துவது என்பது பற்றிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், சிங்கப்பூர் இரத்தினக்கல் வணிகர்கள் சேர்ந்து குழுவாக இலங்கைக்கு வருமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார். செய்தி/படம்: சிங்கப்பூர் இரத்தினக்கல் வர்த்தக சங்கம்

குறிப்புச் சொற்கள்