சிங்கை எழுத்­தா­ளர்­களை அங்­கீ­க­ரிக்­கும் நிகழ்ச்சி

சிங்கை எழுத்­தா­ளர்­களை அங்­கீ­க­ரிக்­கும் நிகழ்ச்சி

2 mins read

ஹர்­ஷிதா பாலாஜி

'சிங்­லிட்' எனப்­படும் சிங்­கப்­பூர் இலக்­கிய இயக்­கம் 'நம் உல­கம் அறிக' என்ற நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர்­க­ளை­யும் அவர்­க­ளின் படைப்­பு­க­ளை­யும் அங்­கீ­க­ரிக்­கும் வகையில், மழலையர் முதல் இளையர் வரையிலான பலரும் உள்­ளூர் இலக்­கி­யங்­கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் அறிந்துகொள்ள ஏதுவாக கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று இந்த நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது.

எழுத்­தா­ளர் அபி கிருஷ்

இந்­நி­கழ்ச்­சி­யில் தமிழ் அங்­கத்­தில் ஐந்து நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்­றன.

"விளை­யா­ட­லாம், கட்­டி­பூஸ்!" என்ற முதல் நட­வ­டிக்­கை­யில் எழுத்­தா­ளர் அபி கிருஷ் எழு­திய மூன்று கதைப் புத்­த­கங்­களை வைத்து கதை­நே­ரம், பாடல்­கள், விளை­யாட்­டு­கள் என்று சிறு­வர்­களை மகிழச் செய்­தார்.

இந்­ந­ட­வ­டிக்­கை­யில் கலந்­து­கொண்ட அனைத்துச் சிறார்­க­ளுக்­கும் எழுத்­தா­ள­ரின் கதைப் புத்­த­கங்­கள் கொடுக்­கப்­பட்­டன.

எழுத்­தா­ளர் ஆர்த்தி ஆனந்த்

வடி­வ­மைப்­பா­ள­ரும் தமிழ் ஆர்­வ­ல­ரு­மான அனு­சியா பாலன் நடத்­திய 'தமிழ் வடிவ விருது' நட­வ­டிக்­கை­யில் தமி­ழில் இருக்­கும் வெவ்­வேறு எழுத்­து­ருக்­கள் சிறார்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. எழுத்­தா­ளர் ஆர்த்தி ஆனந்த் எழு­திய 'வீணா­வும் தொலைந்த பதக்­க­மும்' என்ற கதை­ப்புத்­த­கத்தை வைத்து நற்­குணங்­களைப் பாராட்­டும் வகை­யில் சிறார்­கள் "விரு­து­களை" செய்­தார்­கள். சிறு­வர்­க­ளின் ஆர்­வத்தைத் தூண்ட, விரு­து­களை செய்ய பயன்­ப­டுத்­தப்­பட்ட 'ஸ்டிக்­கர்­களில்' தமிழ் வார்த்­தை­கள் கேளிக்­கை­யான எழுத்­து­ருக்­களில் அச்­சி­டப்­பட்­டி­ருந்­தன.

கவிஞர் நெப்­போ­லி­ய­ன்

மூன்­றா­வது நட­வ­டிக்­கை­யான "இளந்­த­மிழ் வாசிப்­பும் இன்­பத்­தமிழ் விளை­யாட்­டும்" கவி­ஞ­ரும் எழுத்­தா­ள­ரு­மான நெப்­போ­லி­ய­னால் நடத்­தப்­பட்­டது. 12 தொடக்­கப்­பள்ளி மாண­வர்­களும் உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­களும் சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர்­க­ளின் புத்­த­கங்­க­ளி­லி­ருந்து சில பக்­கங்­களைப் படித்­தார்­கள். பிறகு, அவர்­கள் தமிழ் வார்த்­தை­களைத் தொடர்­பு­ப­டுத்­தும் விளை­யாட்டை விளை­யா­டி­னார்­கள்.

தங்கமுனை விருது வென்றவர்கள்

"தங்­க­மு­னைத் தரு­ணங்­கள்" நட­வ­டிக்­கை­யில் தங்­க­முனை விருது 2021 வெற்­றி­யா­ளர்­கள் சிலர் தங்­கள் வெற்­றிப் படைப்­பு­க­ளைப் பற்றி பகிர்ந்­து­கொண்டு மற்ற எழுத்­தா­ளர்­க­ளு­ட­னும் பார்­வை­யா­ளர்­களு­ட­னும் கலந்­து­ரை­யா­டி­னார்­கள். கவிதை, சிறு­கதை போன்­ற­வற்றை எழுதி படைப்­பதை பற்­றி­யும் தங்­க­முனை அங்­கீ­கா­ரம் அவர்­க­ளுக்கு அளித்த ஊக்­கத்தை பற்­றி­யும் அவர்­கள் பகிர்ந்­து­கொண்­டனர். இத்­து­டன், புத்­த­க வாசிப்பின் பயன்­களை­யும் அவர்கள் எடுத்­துக்­கூ­றி­னர்.

எழுத்­தா­ளர் லதா

இறு­தி­யாக, தமிழ் அங்­கத்தை நிறைவுசெய்­யும் வகை­யில் உள்­ளூர் எழுத்­தா­ளர் லதா­வு­டன் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. தனது படைப்பு­களைப் பற்­றி­யும், இக்­கா­லத்­தில் இலக்­கி­யம் படைப்­ப­தற்குத் தேவை­யா­னவை பற்­றி­யும் அவர் கூறி­னார். மேலும், நிகழ்­வு­க­ளை­யும் கற்­ப­னை­யை­யும் உல­கப் பிரச்­சி­னை­க­ளு­டன் படைப்­பில் பிர­தி­பலிக்­கும் திறன் குறித்­தும் அவர் பகிர்ந்து­கொண்­டார்.