தனக்குப் பதிலாக மற்றொருவருக்கு அதிகாரம்

தனக்குப் பதிலாக மற்றொருவருக்கு அதிகாரம்

3 mins read

2026ஆம் ஆண்டு மார்ச் மாதக் கடைசி வரை சிங்கப்பூரர்கள் இலவசமாக நீண்டகால அதிகாரப் பத்திரத்தைப் (Lasting Power of Attorney) பதிவுசெய்து கொள்ளலாம். ஒருவர் தனது மனத்திறனை இழந்து, சுயமாக முடிவுகளை எடுக்க இயலாத ஒரு சூழ்நிலையில், அவர் தனக்குப் பதிலாக வேறொருவரிடம் முடிவுகளை எடுக்கும் பொறுப்பை சட்டப்படி ஒப்படைக்கும் விதமாக இந்தப் பத்திரம் செயல்படும்.

இதற்கு முன்­னர் பொது­மக்­கள் கையேடு வடி­வத்­தில் பத்­தி­ரத்­தைப் பதிவு செய்­த­னர்.

இத­னால், எழுத்­துப் பிழை­கள், குறிப்­பாக முதி­ய­வர்­க­ளி­டத்­தில் அதி­க­ரித்­தது.

அதன் கார­ண­மா­க­வும், நேரத்தை மிச்­சப்­ப­டுத்­த­வும், கடந்த நவம்­ப­ரி­ல்­ இருந்து இச்­சேவை எளி­தான வடி­வில் இணை­யப் பதி­வாக மாறி­யது.

மக்­கள்தொகை மூப்­ப­டைந்துவரும் நம் நாட்­டில் முதி­ய­வர்­கள் மறதிநோய், பக்­க­வா­தம் போன்ற பிணி­க­ளால் அதி­க­மா­க பாதிப்படை­கின்­ற­னர்.

இதன் விளை­வா­கத் தனிப்­பட்ட நலன் தொடர்­பா­க­வும் சொத்து விவ­கா­ரம் தொடர்­பா­க­வும் அவர்­கள் முடி­வு­களை எடுக்க சிர­மப்­படும் சிக்­கல் ஏற்படுகிறது.

முதி­ய­வர்­கள் மட்­டு­மல்­லா­மல், 21 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் யார் வேண்­டு­மா­னா­லும் தாங்­கள் நம்­பும் ஒன்று அல்­லது அதற்­கும் மேற்­பட்ட நபர்­க­ளி­டம் இந்­தப் பொறுப்பை ஒப்­ப­டைக்க முன்வர­லாம்.

குடும்­பத்­தில் ஒரு­வர் மனத்திறனை இழந்­து­விட்­டால், அக் ­குடும்­பம் நீண்­ட­கால அதி­கா­ரப் பத்­தி­ரத்­தைப் பதிவு செய்­யாத பட்­சத்­தில், இதர குடும்­பத்­தார், துணை உத்­த­ர­விற்­குப் (Deputyship order) பதிவு செய்துகொள்ள வேண்­டும். இதற்கு அதி­க­ள­வில் கட்­ட­ணம் செலுத்­த­வேண்­டும்.

இது­போன்ற செல­வு­க­ளைக் கட்டுப்ப­டுத்த ஒரு­வர் பத்­தி­ரத்தை முன்­கூட்­டியே பதிவுசெய்ய ஊக்­கு­விக்­கப்­ப­டு­கிறார்.

பத்­தி­ரத்­தில் இரண்டு வகை­கள் உள்­ளன. படி­வம் ஒன்று (Form 1) மூலம், ஒரு­வர் பொறுப்பை ஒப்­ப­டைக்­க­வி­ருக்­கும் நப­ரி­டம், சில கட்டுப்­பா­டு­க­ளோடு உரி­மை­களை ஒப்­ப­டைப்­பார். படி­வம் இரண்­டில், தனிப்பய­னாக்­கப்­பட்ட உரி­மை­கள் ஒப்­ப­டைக்­கப்­படும்.

அதற்­கான உட்­பி­ரி­வு­களை (clauses) வழக்­க­றி­ஞர் வரைவு ஒன்றை தயார் செய்ய வேண்­டும். பொதுக் காப்­பா­ளர் அலு­வ­ல­கம் சிங்கப்­பூ­ரர்­க­ளுக்கு இதன் முக்­கி­யத்­து­வத்­தைக் கொண்­டு­சேர்க்­கும் வகை­யில், சலு­கை­யாக இல­வச சேவையை நீட்­டித்­துள்­ளது.

சாதா­ரண நிகழ்­வில் பதிவுசெய்­தால், சிங்­கப்­பூ­ரர்­கள் $75 கட்­ட­வேண்­டும். நிரந்­த­ர­வாசிகளுக்கு - $100, வெளி­நாட்­ட­வர்களுக்கு - $250.

சென்ற சனிக்கிழமை காலை ஸ்ரீ ஸ்ரீனி­வாச பெரு­மாள் ஆல­யத்­தின் பிஜிபி மண்­ட­பத்­தில் பதிவு சேவை இடம்­பெற்­றது.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் சமூக சேவை குழு 3வது முறை­யாக வழி­ந­டத்­திய இந்த நிகழ்­வில் காலை ஒன்­பது மணிக்கே பொதுமக்­கள் தங்­கள் குடும்­பத்­தி­ன­ரு­டன் கலந்­துகொண்­ட­னர்.

சமூக சேவைக் குழு­வில் வழக்­க­றி­ஞர்­க­ளாக இருக்­கும் தொண்­டர்­கள் நிகழ்ச்சியில் கலந்­துகொண்­ட­வர்­க­ளுக்கு வழி­காட்­டி­யாக இருந்து, அவர்­க­ளுக்கு சேவையை ஒட்­டிய சந்­தே­கங்களைத் தீர்த்துவைத்­த­தோடு, அவர்­க­ளுக்குச் சுமுக­மா­கப் பத்­தி­ரத்­தைப் பதிவுசெய்து தந்­த­னர்.

சமூக சேவைச் குழு­வின் தலை­வ­ரும் வழக்­க­றி­ஞ­ரு­மான சுசீலா கணே­சன், 52, "நீண்­ட­கால அதி­கா­ரப் பத்­தி­ரத்­தின் அவ­சி­யத்தை சிங்­கப்­பூ­ரர்­கள் முதலில் புரிந்துகொள்ள வேண்­டும். செலவில்லை என்பது ஒரு­பு­றம் இருந்தாலும் வருமுன் காப்­பதே சிறந்­தது," என்றார்.

ஓய்­வு­பெற்ற 79 வயது சின்­னையா யோகேந்­தி­ரன், தம் மனைவி 74 வயது நவ­சக்தி யோகேந்­தி­ர­னு­டன் பதிவுசெய்ய வந்­தி­ருந்­தார்.

இவர்­களுக்கு பிள்­ளை இல்­லாத நிலையில் திரு சின்­னையா தம் மனை­வி­யி­ட­மும் தம் சகோ­த­ரன் மக­னி­ட­மும் பொறுப்பை ஒப்­ப­டைத்­தார்.

சேவை மூலம் பயன்­பெற்ற இந்­தத் தம்­ப­தி­யி­னர், "எங்­க­ளுக்­குப் பிற்­கா­லத்­தில் ஏதோ ஒன்று நடந்துவிட்­டால், பொறுப்­பு­களை ஏற்­றுக்­கொள்ள ஒரு­வர் இருக்­கி­றார் என்ற நம்­பிக்கையை இந்த சேவை வழங்­கி­யுள்­ளது," என்­ற­னர்.

பதிவுசெய்ய வந்­த­வர்­களில் சிலர், இதை உயில் என்று நினைத்துக் குழம்பிவிட்­ட­னர். உயிலும் இந்தப் பத்திரமும் முற்றிலும் வேறுபட்டவை.

உயில் ஒருவர் இறந்த பிறகு செயல்படுத்தப்படும் ஒன்று. ஆனால், இந்தப் பத்திரம், ஒருவர் முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில், அவருக்குப் பதிலாக வேறொருவர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என விளக்கமளித்தார், பதிவுசெய்ய உதவிய டான் லெராய் & அசோஷியேட்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர் கந்தன் ராகவேந்திரா, 38.

இது குறித்த மேல்விவரங்களுக்கு https://opg-eservice.msf.gov.sg/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.