பண்பாடுகளை ஆழ, அகல ஆராய்ந்த கலந்துரையாடல்

2 mins read

பல்­லின சமூ­க­மான சிங்­கப்­பூ­ரில் பல ­த­ரப்­பட்ட பண்­பா­டு­க­ளு­டன் தொடர்­பில் இருப்­பது தின­சரி வாழ்­வி­ய­லில் ஓர் அங்­கம். அண்­மை­க்கா­ல­மாய், மேற்­கத்­திய, ஜப்­பா­னிய, கொரி­யத் தாக்­கங்­களும் சமூ­கத்­தில் பர­வ­லாகக் காணப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய நவீன சிங்­கப்­பூ­ரில் உல­க­ம­ய­மா­த­லுக்கு ஈடு­கொ­டுக்­கும் அதே வேளை­யில், எவ்­வாறு சுய அடை­யா­ளத்­தைக் கட்­டிக்­காப்­பது எனும் அடிப்­ப­டை­யி­லான கேள்­வி­களை எழுப்பி தெளிந்­த­னர், நேற்று காலை 'பண்­பா­டு­கள்: ஆழ­மும் அக­ல­மும்' எனும் நிகழ்­வில் கலந்­து ­கொண்ட இளை­யர்­கள்.

சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் நான்­காம் நிறை­வாண்டை ஒட்டி நடந்­தே­றிய இந்­நி­கழ்வு, தமி­ழர்ப் பண்­பாட்டுடன், பிற பண்­பாடுகளை­யும் குறித்த புரி­தலை இளை­யர்களி­டத்­தில் மேம்­ப­டுத்த முற்­பட்­டது.

ஏறக்­கு­றைய 70 பேர் இந்­நி­கழ்­வில் கலந்து­கொண்டனர்.

தேசிய நூல­கத்­தின் 'பாசி­பி­லிடி' அறை­யில் அவர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

இளை­யர்­கள் தொடர்­பு­ப­டுத்­திக்கொள்­ளக்­கூ­டிய அள­வில், பண்­பா­டு­களை ஆராய்ந்­த­னர், கலந்­து­ரை­யா­ட­லில் பல்­வேறு கண்­ணோட்­டங்­களை முன்­வைத்த பேராசிரியர் சித்ரா சங்­க­ரன், நளினா கோபால், சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் தலை­வர் அருண் மகிழ்­நன் ஆகி­யோர்.

உல­க­ள­வில் பண்­பா­டு­க­ளின் பன்­மு­கத்­தன்மை, வர­லாற்று மேற்­கோள்­கள், சிங்­கப்­பூ­ரில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆராய்ச்சி முயற்­சி­கள் ஆகி­யன குறித்த தக­வல்­கள் கலந்­து­ரை­யா­ட­லில் இடம்­பெற்­றன. "சுய அடை­யா­ளத்­தைப் பற்றி தெரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்ற ஆர்­வத்தை இளை­யர்­கள் இந்­நி­கழ்­வில் தங்­க­ளின் கேள்­வி­கள்­ மூ­லம் வெளிப்­ப­டுத்­தி­னர்.

"தமிழ்­மொழி, பண்­பாடு சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து தழைக்­கும் என்ற நம்­பிக்­கையை இது ஏற்­ப­டுத்­தி­யது," என்­றார் ஆய்­வா­ளர் நளினா கோபால்.

சிங்­கப்­பூரை உல­கின் நான்கு மிக பெரிய நாக­ரி­கங்­க­ளின் சங்­க­ம­மாக குறிப்­பிட்ட திரு அருண் மகிழ்­நன், இத்­த­கைய ஓர் அரிய சூழ­லைக் கொண்­டி­ருக்­கும் உலக நாடு­கள் வெகு சில என்று கூறி­னார்.

"இன்­னொரு பண்­பாட்­டைப் பற்றி தெரிந்­து­கொள்­வது இன்­னோர் உல­கத்­துக்­கான சாவி­யைப் பெறு­வது போன்­றது. இதைக் கொண்டு, மகத்­தான செல்­வங்­க­ளைத் திறக்­க­லாம்; பிரம்­மாண்­ட­மான சாத்­தி­யங்­களை உரு­வாக்­க­லாம்," என்­றார் அவர்.

பல்­வேறு பண்­பா­டு­க­ளுக்கு இடையே பால­மாக விளங்­கு­வது, தமி­ழர்ப் பண்­பாடு குறித்த விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்­து­வது என சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் முக்­கிய இரு நோக்­கங்­களை நேற்­றைய நிகழ்வு முன்­னி­றுத்தி பறை­சாற்­றி­ய­தாக தெரி­வித்­தார் நிகழ்ச்சி ஏற்­பாட்­டுக் குழு­ உறுப்பினர்களில் ஒரு­வ­ரான செம்­பி­யன் சோம­சுந்­த­ரம்.

தமிழ்­மொழி தங்­க­ளது வாழ்­வி­ய­லுக்கு எவ்­வாறு கைகொ­டுத்­துள்­ளது என 10 வல்­லு­நர்­கள் விவ­ரிக்­கும் 'நானும் தமி­ழும்' எனும் காணொ­ளித் தொகுப்­பின் வெளி­யீட்­டை­யும் இந்­நி­கழ்வு கண்­டது. அடுத்த சனிக்­கி­ழமை முதல் இக்­கா­ணொ­ளி­கள் வாரந்­தோ­றும் மையத்­தின் சமூக ஊட­கத் தளங்­களில் வெளி­யி­டப்­படும்.