தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2024ல் அதிகமானோரை ஈர்த்த பயண இடங்களின் பட்டியல்

2 mins read
aca07e2f-261e-4b54-808d-adf21dbcec3f
மின்னிலக்‌கப் பயணத் தளமான அகோடா தனது 2024ன் மிகப் பிரபலமான அனைத்துலகப் பயண இடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. - படம்: ஃப்ரீபிக்‌

மின்னிலக்‌கப் பயணத் தளமான அகோடா வெளியிட்ட 2024ன் மிகப் பிரபலமான அனைத்துலகப் பயண இடங்களின் பட்டியலில் பேங்காக் முதலிடம் பெற்றுள்ளது.

பேங்காக்கைத் தொடர்ந்து, தரவரிசையில் முறையே சிங்கப்பூர், சோல், கோலாலம்பூர், தோக்கியோ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

2024ல் அதன் அனைத்துலக விமான முன்பதிவுகளில் பெரும்பாலானவை சிங்கப்பூர் பயணிகளால் செய்யப்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அகோடா தெரிவித்துள்ளது.

நவீன இடங்கள், கலாசாரப் பாரம்பரியம் ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன் இவ்விடங்கள் தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்ப்பதாக அகோடா கூறியது. இரவு நேரங்களில் பேங்காக் தெருக்‌களில் காணப்படும் கோலாகலம், தனித்துவமான வானளாவிய கட்டடங்களைக்‌ கொண்ட சிங்கப்பூர், பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்‌கும் சோல் ஆகியவை பயணிகளுக்குப் பல்வேறு பயண அனுபவங்களை வழங்குகின்றன.

கோலாலம்பூர் அதன் கலாசார அடையாளங்களுக்காக தனித்து நிற்கிறது. அதே நேரத்தில், தோக்கியோவின் வசீகரம் அதை மக்‌களிடையே நீடித்த விருப்பமான பயண இடமாக்குகிறது.

விடுமுறைக் காலத்திற்கான தங்குமிடத் தேடல்களில் ஆண்டுக்கு ஆண்டு 14% அதிகரிப்பை அகோடாவின் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

2024 கிறிஸ்துமஸ் பயணத்திற்கான ஆகப் பிரபலமான உலகளாவிய இடமாக, பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடம் பெற்ற தோக்கியோவிடமிருந்து கிரீடத்தை இந்த ஆண்டு பேங்காக் பெற்றது‌. தற்போது இரண்டாவது இடத்தில் தோக்கியோவும் சோல், தைப்பே, ஒசாகா ஆகியவை அடுத்த மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.

அகோடாவின் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் ஆசிய நகரங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பரபரப்பான விடுமுறைச் சந்தைகள் முதல் கலாசார விழாக்கள் வரை, இந்நகரங்கள் அனைத்துலகப் பயணிகளுக்கு மறக்க முடியாத பருவகால அனுபவங்களை வழங்குகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்